முகப்பு > இந்தியா

​நாட்டு நலன் குறித்து விவாதிக்க 3 நாள் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் - அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் பங்கேற்பு!

September 01, 2017

​நாட்டு நலன் குறித்து விவாதிக்க 3 நாள் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் - அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் பங்கேற்பு!3 நாட்கள் நடைபெறும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அனைத்து இந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் மதுராவில் இன்று தொடங்க உள்ளது. 

இதில் இந்தியா -சீன எல்லை விவகாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் இந்திய பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இதில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்