முகப்பு > இந்தியா

சமூக வலைதளங்களை கண்காணிக்கும் வருமான வரித்துறை!

September 11, 2017

சமூக வலைதளங்களை கண்காணிக்கும் வருமான வரித்துறை!தனி நபர்களின் வருமான விவரங்கள் குறித்து முழுமையாக அறிவதற்காக அவர்களது சமூகவலைதளப் பதிவுகளைக் கண்காணிக்கும் பணிகளை வருமானவரித்துறை மேற்கொள்ளவுள்ளது. 

புதிதாக வாங்கிய சொகுசு கார்கள், ஆடம்பரப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள், வருமானவரித் தாக்கலின் போது அவற்றை மறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பையும், கருப்பு பண பதுக்கலையும் தடுக்கும் நோக்கில் இந்த கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்