​சூடான நீருடன் மஞ்சள் சேர்த்து பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? | Know These 9 Benefits Of Drinking Warm Water With Turmeric In The Morning | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​சூடான நீருடன் மஞ்சள் சேர்த்து பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

July 11, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6169 Views

காலையில் எழுந்தவுடன் சூடான நீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நம்மில் பெரும்பானமையானோர் அறிவோம். காலையில் சூடான நீர் பருகுவதால் அது உடலின் உள் உறுப்புக்களை சுத்தம் செய்கிறது, செரிமான அமைப்பில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது, வளர்சிதை தூண்டப்படுகிறது, சருமத்தை சுத்தமாக்குகிறது. 

ஆனால் சூடான நீருடன் சிறிதளவு மஞ்சளை சேர்த்து பருகும்போது அது நமக்கு மேலும் பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது. அவை என்னென்ன என்பது குறித்து இத்தொகுப்பிக் அறிந்து கொள்வோம்.

1. இதயத்திற்கு நண்பன்: 

கொழுப்பு அளவை குறைப்பதில் மஞ்சள் சிறந்த ஒரு மருந்தாக செயல்படுகிறது, தமனிகளில் படியும் கொழுப்பை குறைக்கிறது இதனால் தமனித் தடிப்பு நோயை இது சரி செய்கிறது. தமனிகளில் கொழுப்பு படிவது மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புக்களையும் இது சரி செய்கிறது.

2. புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது:

மஞ்சளை வழக்கமாக எடுத்துக்கொள்வதால் புற்றுநோய் ஏற்படும் சூழலை கட்டுப்படுத்தும். கதிர்வீச்சுகளால் ஏற்படும் கட்டிகளையும் இது சரி செய்கிறது.

3. மூளை செல்களை காக்கிறது: 

ஞாபக மறதி மற்றும் நினைவாற்றல் தொடர்பான அல்சைமர் நோய் பாதிப்புகளை சரிசெய்வதில் மஞ்சளின் பணி அளப்பரியது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருளானது அல்சமைருக்கு எதிராக செயல்படுவதாக ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 
நரம்பு திசுக்களின் வீக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.

4. சருமம் மற்றும் மேனி வண்ணம்:

சருமத்திற்கு மஞ்சள் உற்ற நண்பனாகும். இயற்கையாகவே ரத்தத்தை சுத்தீகரிக்கும் பணியை இது மேற்கொள்கிறது. ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது, சருமத்தில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் ஆண்டிஆக்ஸிடண்ட் மஞ்சளில் உள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக சருமத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்வதோடு, பொலிவையும் மஞ்சள் அளிக்கிறது.

5. மூட்டு சம்பந்தமான வீக்கம் :

மூட்டு திசுக்களுக்கு சேதம் விளைவிக்கும் வீக்கத்தை மஞ்சள் கலந்து வென்னீர் குணப்படுத்துகிறது. இதன் மூலம் மூட்டு வலி மூட்டு வீக்கம் கட்டுப்படுகிறது. எனவே மூட்டு வலி உள்ளவர்கள் மஞ்சள் கலந்த சுடுநீரை அன்றாடம் பருகி வருவது நன்மையளிக்கும்.

6. உடல் எடை குறைக்கிறது:

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை இந்த மஞ்சள் சுடுநீர் குறைப்பதால், அதிக எடை கொண்டவர்கள் நாளின் தொடக்கத்தில் இந்த நீருடன் தொடங்குவது நல்லது.

7. செரிமான சக்தியை அதிகரிக்கிறது:

மஞ்சள் கலந்த சுடுநீர் பித்தப்பையை தூண்டிவிடுவதால் பித்தநீர் மற்றும் பிற செரிமான நொதிகள் உற்பத்தி ஆகின்றன, இதன் மூலம் உடலின் செரிமான சக்தி அதிகரிக்கிறது. நாள் முழுவதுக்குமான செரிமான சக்தியை ஒரு கோப்பை மஞ்சள் கலந்த வென்னீர் அளித்துவிடுகிறது.

8. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது:

இந்த நீரானது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அளிக்கிறது. வழக்கமாகவே இந்த நீரை பருகிவரும் போது குளிர், காய்ச்சல் அல்லது பிற தொற்றுகள் நம்மை அண்டாது, குறிப்பாக மழைக்காலங்களில் இதனை எடுத்துக்கொள்ளும்போது வைரஸ் தாக்குதல்களில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம்.

9. சர்க்க்ரை நோயாளிகளுக்கு அதிகபலன்:

மஞ்சள் நீர் பருகுவதால், நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரையை சரியான முறையில் செயல்பட வைக்கிறது, இதன் மூலம் சர்க்க்ரை அளவு திடீரென உயர்வது கட்டுப்படும். இது சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )