Skip to main content

பாடி அசத்தும் கழுதை...இணையதளத்தில் வைரலான வீடியோ!

December 07, 2018 564 views Posted By : shanmugapriyaAuthors
Image

கழுதை ஒன்று பாடும் வீடியோ சமூகவலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

பொதுவாக, கழுதை எழுப்பும் ஒலியை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த கழுதை ஒன்று வித்தியாசமான குரலில் பாடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

புனேவை சேர்ந்த NGO-வை சேர்ந்தவர்களால் கண்டெடுக்கப்பட்டு, எமிலி என்று பெயர் வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது இந்த கழுதை. எமிலி, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் இனிமையான குரலில் பாடி அங்கிருப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை, NGO-வை சேர்ந்தவர்கள், வீடியோ எடுத்து சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர்.

 

பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்டது அந்த வீடியோ. கழுதை இனிமையான ஒலி எழுப்புவது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபொழுது சில கழுதைகள் மிகவும் மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தும்பொழுது இதுபோன்ற சத்தம் ஏற்படும் என தெரிவித்தார்.

 

இதேபோன்று, சில ஆண்டுகளுக்கு முன்னர் அயர்லாந்தை சேர்ந்த ஹாரியட் என்ற கழுதை பாடி அசத்தியது குறிப்பிடத்தக்கது. 

Categories: India
Image

"அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குத் தான் பொது சின்னம் ஒதுக்க முடியும்; விதிகளை மீறி நாங்கள் செயல்பட முடியாது!" - தேர்தல் ஆணையம்

52 minutes ago

அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

52 minutes ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் உள்ள அதிமுக முன்னாள் பிரமுகர் பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி சம்மன்!

3 hours ago

நாடாளுமன்றத் தேர்தலில் இன்றுடன் நிறைவடைகிறது வேட்பு மனு தாக்கல்; இதுவரை 604 பேர் வேட்பு மனு தாக்கல்.

4 hours ago

மம்தா கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அந்தமான் செல்கிறார் கமல்ஹாசன்!

4 hours ago

ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணிற்கு அரசு வேலை, வீடு வழங்க வேண்டும்; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.