இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​பத்மாவதி வெளியானால் வன்முறை வெடிக்கும் - இந்து கலாச்சார அமைப்புகள் எச்சரிக்கை!

November 12, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7365 Views


பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவர உள்ள பத்மாவதி திரைப்படத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குஜராத்தில் இந்து அமைப்பினர் இன்று பிரம்மாண்ட கண்டன பேரணியை நடத்தினர்.

விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ராஜபுத்திர ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர்களும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் படத்தை தடை செய்ய வலியுறுத்தி குஜராத் மாநிலம் சூரத்தில் விஷ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்பினர் ராஜபுத்திர இனத்தவர்களுடன் சேர்ந்து பிரம்மாண்ட கண்டன பேரணியை மேற்கொண்டனர்.

இந்து கலாச்சாரத்திற்கு எதிரான இந்த படம் வெளியிடப்பட்டால் வன்முறை வெடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)