இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Breaking News

Jallikattu Game

​ஆட்டோமேடிக் கியர் ஷிப்ட் வசதியுடன் கூடிய புதிய Maruti Suzuki Vitara Brezza கார் அறிமுகம்!

May 9, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5538 Views

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவி (SUV) ரக Vitara Brezza காரின் Automated Manual Transmission (AMT) மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.

Vitara Brezza காரானது கடந்த 2016ஆம் ஆண்டில் மாருதி நிறுவனத்தால் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட காம்பாக்ட் SUV ரக காராகும். இது முற்றிலும் இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்ட சுசுகியின் முதல் காராகும். இது ஹரியானா மாநிலத்தில் உள்ள மாருதியின் மானேசர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

அறிமுகம் முதலே மாருதியில் சிறந்த விற்பனையாகும் ஒரு மாடலாக மாறிபோன Vitara Brezza, மாதம் ஒன்றிற்கு சராசரியாக 12,300 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. இதுவரை 2.75 லட்சத்திற்கும் அதிகமான Brezza கார்கள் விற்பனையாகி அதனை வெற்றிகரமான மாடல்களுள் ஒன்றாக வலம்வரச் செய்துள்ளது.

இந்நிலையில், இதன் Automated Manual Transmission வசதி கொண்ட புதிய மாடல் காரானது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது உட்புற, வெளிப்புற மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.

வேரியண்ட்கள்:

8.54 லட்ச ரூபாய் ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ள புதிய Vitara Brezza(AMT) கார், VDi, ZDi, ZDi+ மற்றும் ZDi+ Dual Tone ஆகிய 4 வேரியண்ட்களில் வெளிவந்துள்ளது.

மாற்றங்கள் & அம்சங்கள்:

இதில் புதிய கருப்பு வண்ண அலாய் வீல்கள், பிரீமியம் கிரோம் கிரில் அமைப்பு, பின்பக்க கதவில் கிரோம் வேலைப்பாடுகள் ஆகியவை புதிதாக இடம்பெற்றுள்ளன.

சிறுவர்களுக்கான ISOFIX சிஸ்டம், அதிவேக எச்சரிக்கை அமைப்பு, டூயல் ஏர்பேக்குகள், இபிடி வசதியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் என அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் ஸ்டேண்டர்டாக கொடுக்கப்பட்டுள்ளன.

இஞ்சின்:

இது தவிர மெக்கானிக்கல் மற்றும் காஸ்மெடிக் அம்சங்களில் மாற்றாமின்றியே இக்கார் வெளிவந்துள்ளது. Vitara Brezza (AMT) காரில் அதிகபட்சமாக 90 PS ஆற்றலையும், 200Nm டார்க்கையும் வெளிப்படுத்தவல்ல 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்சின் உள்ளது.

விலை:

புதிய Vitara Brezza (AMT) காரானது ரூ.8.54 லட்சம் முதல் ரூ.10.49 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.இது Ford EcoSport மற்றும் சமீபத்திய அறிமுகமான Tata Nexon AMT வெர்ஷனுக்கு போட்டியாக அமையும்.
 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தால் கர்நாடகத்தில் விவசாய

மனைவி அனுஷ்கா சர்மா குறித்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த

மலைப்பாம்போடு புகைப்படம் எடுக்க முயன்ற வனத்துறை அதிகாரி

தற்போதைய செய்திகள் Jun 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.16 /Ltr (₹ -0.08 )
  • டீசல்
    ₹ 71.54 /Ltr