இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

நாட்டிலேயே அதிகளவு GST வரி செலுத்தியது ரிலையன்ஸ் குழுமம் தான்: முகேஷ் அம்பானி பெருமிதம்!

July 6, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
15881 Views

நாட்டிலேயே அதிக வரிசெலுத்தும் நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறவனம் பெற்றுள்ளதாக அதன் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.  

மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 41வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர்,  கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் 42 ஆயிரத்து 553 கோடி ரூபாய் வரி கட்டியுள்ளதாக தெரிவித்தார். 

ஜியோ தொடங்கப்பட்ட 22 மாதங்களில் 21 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. இதோடு நிற்காமால் பல்வேறு சலுகைகளை சாமானிய மக்களுக்கு ஜியோ வழங்க உள்ளது. அதன் ஒருபகுதியாக வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரூ.2 ஆயிரத்து 999 மதிப்புடைய ஜியோ போன் 2 சந்தைப்படுத்தப்படுகிறது. 

ஜியோ ஜிகா பைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற  பைபர் கேபிள் இணைப்புடன் கூடிய புதிய ப்ராட்பேண்ட் சேவை ஆகஸ்ட் 15-ம் தேதி சந்தைப்படுத்தப்படும். இதன்மூலம் 1100 நகரங்களில் உள்ள வீடுகள், சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு உயர்தர இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும். 

தங்களது நிறுவனத்தின் நிகர லாபம் 20 புள்ளி 6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் தொடர்ச்சியாக, ஜியோ ஃபைபர் ப்ராட்பேண்ட் சேவையையும் முகேஷ் அம்பானி தொடங்கி வைத்தார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )