இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​ஜி.எஸ்.டி-யால் மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிப்பு!

January 29, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
10110 Views

2018-19ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 முதல் 7.5 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளான இன்று, மக்களவை, மாநிலங்களவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 2018-19ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இதில், வரி வசூல், சேவைத் துறை  மற்றும் விவசாயத்துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. 

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருவது கவலையளிக்கும் விஷயம் என பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் உலகளவில், பொருளாதார ரீதியாக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்பை பெருக்கவும், விவசாயத்தை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதன் மூலம் மறைமுக வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மகராஷ்டிரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிகளவிலான ஜி.எஸ்.டி பதிவர்கள் அதிகரித்துள்ளன. முந்தைய வரி முறையைக் காட்டிலும் ஜி.எஸ்டி வரி விதிப்பு முறையில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் புதிதாக வரி செலுத்துவோர்கள் அதிக எண்ணிக்கையில் அதிகரித்துள்ளனர். 

2017ம் ஆண்டு டிசம்பர் வரை 98 லட்சம் வர்த்தகர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரிவசூலைப் பொருத்தவரை, மாநில ஜிஎஸ்டி வரியைக்காட்டிலும், மத்திய ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரிவசூலை ரூ.10.9 லட்சமாக எதிர்பார்க்கப்படுகிறது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )