இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா: ஜிடிபி 7.2% ஆக உயர்வு!

February 28, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
16414 Views

கடந்த காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP - Gross Domestic Product) 7.2% ஆக அதிகரித்திருப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில், சீனாவை இந்தியா முந்தியுள்ளது. 

2017-18 ஆம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் எதிர்பார்க்கப்பட்ட அளவினைக்காட்டிலும் கூடுதலான உள்நாட்டு உற்பத்தியைக் கடந்து, உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக சீனாவை வீழ்த்தியுள்ளது இந்தியா.

2017ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் சீனா 6.8 சதவீதம் வரையிலான ஜிடிபி வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியா இக்காலாண்டில் 6.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தால் 2016ல் இழந்த உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக சக்தியாக மீண்டும் வர முடியும் என்று கூறப்பட்ட நிலையில் 7.2 சதவீத வளர்ச்சியுடன் சீனாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது இந்தியா.

கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5.7% ஆகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.5% ஆகவும் இருந்த ஜிடிபி விகிதம் தொடர்ந்து 3வது காலாண்டாக அதிகரித்துள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் வாராக்கடன் காரணமாக விமர்சனத்தை சந்தித்து வரும் பாஜக அரசுக்கு ஜிடிபி வளர்ச்சி அதிகரித்திருப்பது நிச்சயம் ஊக்கத்தை அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. 

இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு சீர்த்திருத்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட இடற்பாடுகள் சரி செய்யப்பட்டு பொருளாதார நிலை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, நாட்டின்  வளர்ச்சி விகிதத்தை பாதித்துவிடக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்காவின் ஜிடிபி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 2.5% ஆக சரிந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 3.2% ஆக இருந்தது.


Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )