இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​வேலைவாய்ப்பை பெருக்க வங்கிகளில் 2.11 லட்சம் கோடி முதலீடு - அருண் ஜெட்லி!

October 25, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7672 Views


தொழில்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை தடுக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மத்திய அரசு 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விளக்கிய அவர், பல்வேறு தடைகளில் இருந்து நாட்டின் பொருளாதாரம் தற்போது மீண்டு வருவதாக கூறினார்.

அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளினால் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகவும் அருண்ஜெட்லி தெரிவித்தார். மத்திய அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால் அந்நிய முதலீடு, மூன்று ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மத்திய அரசு முதலீடு செய்வதன் மூலம், தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கும் என்றும், இதனால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து, வேலைவாய்ப்பு பெருகும் எனவும் அருண்ஜெட்லி விளக்கினார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)