இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

வளர்ச்சி பாதையில் இந்தியா: ஆசிய மேம்பாட்டு வங்கி தகவல்!

July 23, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
16642 Views

மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதத்தை எட்டும் என ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. 

உலகிலேயே அதிவேக பொருளாதார வளர்ச்சியை எட்டிவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பதாக அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது. 

வாராக்கடனில் தத்தளிக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு  மூலதனம் வழங்கி பலப்படுத்தினால், அடுத்த நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும் எனவும் ஆசிய மேம்பாட்டு வங்கி கூறியுள்ளது.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்திய வங்கித்துறையின் வாராக்கடன் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிக்கைபடி 21 பொதுத்துறை வங்கிகளில் 8.26 லட்சம் கோடி அளவுக்கு வாராக்கடன் இருக்கிறது. 

இந்த வங்கிகள் வழங்கியுள்ள கடனில் இது 15.8 சதவீதமாகும். கடந்த மார்ச் மாதம் லோக்சபாவில் எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா, அரசு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும், அதை செலுத்தாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 9 ஆயிரத்து 63 பேராக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 9 மாதங்களில் 1.66 சதவீதம் பேர் அதிகரித்துள்ளனர். இவர்கள் மூலம் அரசு வங்கிகளின் வாராக்கடன் ஏறக்குறைய ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 50 கோடியாக அதிகரித்துவிட்டது என கூறப்படுகிறது.
 
அதேவேளையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, திடீரென அதிகரித்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் எனவும் ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )