இன்றைய வானிலை

  • 35 °C / 95 °F

Breaking News

Jallikattu Game

​Renault Duster காரின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு!

March 2, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
15983 Views

Renault Duster காரின் விலையில் ரூ.1 லட்சம் வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது, புதிய விலைப் பட்டியல் மற்றும் விவரங்களை இத்தொகுப்பில் காணலாம்.

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான Renault. இந்தியாவில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. 

இந்நிறுவனம் Kwid, Pulse, Duster என 9 வகையான மாடல்களில் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வந்தாலும் பட்ஜெட் மாடலான Kwid மிகப்பெரும் வெற்றியை இந்திய வாகனச் சந்தையில் பெற்றுள்ளது.

சென்னை அருகேயுள்ள ஓரகடத்தில் தனது கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியுள்ள Renault நிறுவனம், இந்தியாவில் முன்னணி இடத்தை பிடிக்க மிகவும் முனைப்பு காட்டி வருகிறது.

Renault-ன் காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) மாடலான  Duster ஸ்டைல் மற்றும் பவர் என ஒருங்கிணைந்திருப்பதால் மக்களிடையே வரவேற்பை பெற்ற ஒரு மாடலாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக யாரும் எதிர்பாராவிதமாக Duster கார்களுக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரையிலான விலை சலுகையை Renault அறிவித்துள்ளது. 

இதன் மூலம் மாடல்களுக்கு ஏற்ப குறைந்தபட்சமாக 29,746 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1,00,761 ரூபாய் வரை Duster காரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Duster எஸ்யூவிக்கான உள்நாட்டு உதிரிபாகங்கள் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக விளைந்த பணப் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக ரெனோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய விலை:

இதன் மூலம் பெட்ரோல் மாடல் Duster கார் ரூ.7.95 லட்சம் முதல் ரூ.9.95 லட்சம் வரையில் தற்போது கிடைக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ.8.5 லட்சம் முதல் ரூ.10.24 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல டீசல் மாடல்  Duster காரின் புதிய விலை ரூ.8.95 லட்சம் முதல் ரூ.12.79 லட்சம் ஆக உள்ளது. முன்னதாக இது ரூ.9.45 லட்சம் முதல் ரூ.13.79 லட்சம் ஆக இருந்தது.

வேரியண்ட் வாரியாக Duster காரின் புதிய விலை:


புதிய Duster எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதே டீசல் எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல மற்றொரு ஆப்ஷனிலும் கிடைக்கிறது

டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 108 பிஎச்பி பவரை அளிக்கும் மாடலானது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.

Duster மாடலானது ஹூண்டாய் க்ரெட்டாம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு இகோ ஸ்போர்ட் ஆகிய எஸ்யூவி கார்களுடன் போட்டியில் உள்ளது.
 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த

22 வயது பெண் ஒருவர், 40 ஆண்களால் 4 நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு

தினமும் பால் குடித்தால் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும்

ராஜஸ்தானில் பசு திருடுபவர்  என்ற சந்தேகத்தில், ஒருவர்

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி அருகே, இளம்பெண்ணை கடத்திச்

தற்போதைய செய்திகள் Jul 22
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.43 /Ltr (₹ -0.16 )
  • டீசல்
    ₹ 71.90 /Ltr (₹ -0.16 )