இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

Vodafone - Idea நிறுவனங்களின் இணைப்பால் 5,000 பேர் வேலையிழப்பு?

April 16, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7655 Views

தொலைத்தொடர்புத்துறையில் மாபெரும் இரண்டு நிறுவனங்களாகவும் போட்டி நிறுவனங்களாகவும் விளங்கிய ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள் விரையில் இணைய இருக்கின்றன.

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட கடும் போட்டி காரணமாக ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தன. இரு நிறுவனங்களும் கூட்டாக ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டது, தொலைத் தொடர்புத்துறையிடமிருந்து மட்டுமே இந்த இணைப்புக்கான ஒப்புகை கிடைக்கவில்லை என்றாலும் இதர ஒப்புகை அனைத்தும் பெற்றாகிவிட்டது. விரைவில் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த இணைப்பு காரணமாக அந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த இரண்டு நிறுவனங்களிலும் ஒட்டுமொத்தமாக 21,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்ற சூழலில் செலவுத் தொகையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஆதித்யா பிர்லா குழுமத்தில் கீழுள்ள ஐடியா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பதிலளிக்க மறுத்த நிலையில் இது குறித்து வோடஃபோன் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இது முற்றிலும் ஊகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டு என்றும் முற்றிலும் பொய்யான தகவல் என்றும் குறிப்பிட்டார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யில்

பாஜக அரசுக்கு எதிரான டெல்லி ஆர்ச் பிஷப்பின் கடிதம் உள்நாட்டு

பெண் ஊடகவியலாளர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்து

தற்போதைய செய்திகள் May 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 80.11 /Ltr (₹ 0.32 )
  • டீசல்
    ₹ 72.14 /Ltr (₹ 0.27 )