இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகையை அதிரடியாகக் குறைத்த எஸ்.பி.ஐ வங்கி!

March 13, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
12177 Views

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறும் வாடிக்கையாளர்களுக்கான அபராதத்தொகையை 75% குறைத்துள்ளது.

எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகரங்களில் வங்கிக்கணக்கு வைத்திருப்போர் 3,000 ரூபாயும், சிறு நகரங்களில் வங்கிக்கணக்கு வைத்திருப்போர் 2,000 ரூபாயும், கிராமங்களில் வங்கிக்கணக்கு வைத்திருப்போர் 1,000 ரூபாயும் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும்.

இத்தொகையை பராமரிக்கத் தவறும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூ.50 முதல் குறைந்தபட்சமாக ரூ.25 வரை அபராதமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் தொடர் எதிர்ப்பு, அதிருப்தி காரணமாக குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி மாத அபராதமாக அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.

ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கையால், ஏறக்குறைய 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 23
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )