இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​பிரான்ஸை பின்னுக்கு தள்ளி உலகின் 6-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி

July 11, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
20657 Views

பிரான்ஸை பின்னுக்குத் தள்ளி உலக அரங்கில் 6வது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என உலக வங்கி அறிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டிற்கான பொருளாதாரம் தொடர்பான புள்ளிவிவரங்களை உலக வங்கி வெளியிட்டுள்ளது, அதனடிப்படையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி (GDP) ஆனது 2.59 டிரில்லியன் (1,65,76,000 கோடி ரூபாய்) டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸ் நாட்டின் ஜிபிடி ஆனது 2.58 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. இதன் மூலம் இதுவரை உலகின் 6வது பெரிய பொருளாதார நாடாக விளங்கிய பிரான்ஸை இந்தியா முந்தியுள்ளது.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் என அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டதால், ஒரு கட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவு சுணக்கம் ஏற்பட்டிருந்தது, அதன் பின்னர் பொருளாதாரம் ஏற்றம் காணத்தொடங்கியது.

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்டதாக இந்தியா உள்ளது என உலக வங்கி கூறியிருந்தது, 2018ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 % ஆகவும், அடுத்து வரும் ஆண்டுகளில் 7.5% ஆக இருக்கும் எனவும் உலக வங்கி கணிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி ஆலோசனை மையமானது, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளை விரைவில் முந்தி உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக 2032ஆம் ஆண்டுவாக்கில் இந்தியா விளங்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் பொருளாதாரமானது தற்போது நீடித்த வளர்ச்சியை வழங்கவல்ல வலுவான, நெகிழ்வான மற்றும் திறன் கொண்டதாக உள்ளது என்று உலக வங்கியின் அபிவிருத்தி வாய்ப்புகள் குழுவின் தலைவர் அய்ஹன் கோஸ் கூறியுள்ளார். 

வலுவான தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெருக்க உதவும் என்று உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )