இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​178 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைத்து நிதியமைச்சர் உத்தரவு!

November 11, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4200 Views

சாக்லேட், ஷாம்பு உள்ளிட்ட 178 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீத்தில் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது வரும் 15-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். 

ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-வது ஆலோசனைக் கூட்டம் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 211 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. சாக்லேட், ஷாம்பூ, சோப்பு பவுடர், சோப்பு உள்ளிட்ட 178 பொருட்களுக்கான வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. 13 பொருட்களுக்கான வரியை 18%-லிருந்து 12%-ஆகவும், 6 பொருட்களுக்கான வரியை 18%-லிருந்து 5%-ஆகவும், 8 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12%-லிருந்து 5%-ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

ஜவுளிக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. 5 நட்சத்திர ஹோட்டல்கள் தவிர்த்து பிற ஹோட்டல்களுக்கு இனி ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அனைத்து வகையான உணவகங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை வாடகை வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதமாக வரி குறைக்கப்படுகிறது. கிரைண்டர் மீதான வரியை 18% லிருந்து 12% ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த வரி குறைப்பு வரும் 15-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று, செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)