இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Popup

Breaking News

Jallikattu Game

​ராணுவ தளவாட உற்பத்தியில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்!

February 1, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8601 Views

ராணுவ தளவாட உற்பத்தியில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர்,  கிராமப்புறங்களில் 5 இலட்சம் இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்த்தப்படும் என்றும் குறிப்பிட்டார். நாட்டின் தங்க பரிமாற்றத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் கங்கையை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும அவர் குறிப்பிட்டார். 

ஆயுத உற்பத்தியில் தன்னிறைவை அடைய தனியார் பங்களிப்புடன் ஆலைகள் அமைக்கப்படும் என குறிப்பிட்ட அருண் ஜெட்லி, ராணுவ தளவாட உற்பத்தியில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கான வரி தற்பொழுது உள்ள 30 சதவீதத்திலிருந்து 25% ஆக குறைக்கப்படுவதாகவும் கூறினார். காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்படும் எனவும்  காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துக்கு உதவும் வகையில் 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு மானியம் 1.5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர், அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். ஆசிரியர் பயிற்சியில் ஒருங்கிணைந்த பி.எட் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், டெல்லி, ஹரியானா மாநிலங்களில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தனி கவனம் செலுத்தப்படும் எனவும் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். வருங்கால வைப்பு நிதியில் பெண்கள் வேலைக்கு சேர்ந்து 3 ஆண்டுகள் ஆனால் 8 சதவீதம் செலுத்தினால் போதும் என்றும் சிறு குறு தொழில்கள் வளர்ச்சிக்கு 3 ஆயிரத்து 794 கோடி ரூபாய் மானிய உதவி வழங்கப்படும் என்றும் அருண்ஜெட்லி தெரிவித்தார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஒடிசா மாநிலம் ஜஹர்சுகுடா மாவட்டத்தில் 18 வயது பெண், மொபைல்

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் 11வது நாளாக நாடாளுமன்றம்

2ஜி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,

மத்தியில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு

லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்து கர்நாடக அமைச்சரவை

தற்போதைய செய்திகள் Mar 20
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)