இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

இந்தியாவில் அறிமுகம் ஆனது Amazon Prime Music சேவை..!

March 1, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6452 Views

இந்தியாவில் அமேசான் பிரைம் மியூஸிக் சேவை தொடங்கப்பட்டுள்ளது இசைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டில் தனது பிரைம் வீடியோ சேவையை துவங்கியது.

தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஸ்டிரீமிங் சேவையை 6 லட்சம் பிரத்யேக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், இதன் போட்டியாளரான Netflix-ஐ முந்தி இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்டிரீமிங் வழங்கும் தளமாக உருவெடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது மியூசிக் ஸ்டிரீமிங் தளத்திலும் தனது கால்தடத்தை பதித்துள்ளது அமேசான்.

கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அமேசான் பிரைம் மியூசிக் ஸ்டிரீமிங் சேவை தற்போது ஓசையில்லாமல் இந்தியாவிலும் தொடங்கப்பட்டுள்ளது.

தற்சமயம் மியூசிக் ஸ்டிரீமிங் சேவைத் துறையில் முன்னணியில் உள்ள Saavn, Gaana, Apple Music போன்ற போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை அமேசான் பியூசிக் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பகட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, போஜ்பூரி, குஜராத்தி, ராஜஸ்தானி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளில் பாடல்கள் அமேசான் தளத்தில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு

கடல் நீரை சுத்திகரித்து, ஒரு லிட்டர் தண்ணீர் 5 காசுக்கு

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்

ஐன்ஸ்டைனின் E=Mc^2 சூத்திரத்தை விட உயர்ந்த கோட்பாடுகள்

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)