இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

August 9, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
763 Views

விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனுத்தாக்கல் செய்த நடிகர் கமல்ஹாசன், மர்மயோகி படத்தை இயக்குவதற்கு ஒரு கோடியும், நடிப்பதற்கு மூன்று கோடி ரூபாயும் முன்பணமாக பெற்றதாக மனுவில் கூறினார்.

திரைப்படத்தின் பணிகளை முடிக்க பிரமிட் சாய்மீரா நிறுவனத்தால் பணம் தர இயலாத நிலையில், அவர்கள் அளித்த காசோலைகளும் பணமில்லாமல் திரும்பி விட்டதாக மனுவில் கமல்ஹாசன் தெரிவித்தார். மர்மயோகி திரைப்படத்தை வேறு தயாரிப்பாளரை வைத்து எடுத்த பின்னர் சாய்மீரா நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்பதாக மனுவில் கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தர், விஸ்வரூபம் படத்தை வெளியிட தடையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )