இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை சரிதை அறிமுகம்!

November 8, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
776 Views

இந்திய சினிமாவுக்கு உலகளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர்களில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முக்கியப் பங்குண்டு. தற்போது அவரது வாழ்க்கை சரிதை வெளியாகி, பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.

உலகத் தமிழர்களின் இதயத்தில் இடம்பிடித்த இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது வாழ்க்கை வரலாற்றை “Notes of a Dream: The Authorized Biography of AR Rahman” என்ற பெயரில், கடந்த 4 ஆம் தேதி புத்தகமாக மும்பையில் வெளியிட்டுள்ளார். சுயசரிதை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் பேசியவை சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இசைப் புயல் என்று சொல்லப்பட்டாலும், எப்போதும் அமைதிப் புயலாகவே காட்சியளிக்கக் கூடிய ரஹ்மான் வார்த்தைகளில் தான் எத்தனை ஆழம் !

”ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை இந்த உலகம் அடையாளம் காண்பதற்கு முன்னர், தான் சந்தித்த சோதனைகள் ஏராளம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், தோல்விகளையே சந்தித்தேன்.  நாளும் தற்கொலை செய்து கொள்ளத்தான் என் மனம் கிடந்து துடித்தது.

என் தந்தையின் இழப்புதான் இந்த எண்ணத்துக்குக் கொண்டு போனது. என்னுடைய 25 வயது வரை தற்கொலை  எண்ணமே மேலோங்கிக் கிடந்தது. என் தந்தை இல்லாத வெறுமை நாட்களே, பிற்காலங்களில் என்னை அச்சமற்ற மனிதனாகவும் மாற்றியது. இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது. எதுவாக இருப்பினும், அது உருவாக்கப்படும் போதே, அதன் முடிவும் எழுதப்பட்டிருக்கிறது” என்றிருக்கிறார்.

இளையராஜாவின் திரை இசைக் குழுவில், தனிக் கலைஞராகவும், குழுக் கலைஞராகவும் அன்று பலர் இருந்தனர். அந்தப் பலரில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். தன்னுடைய 11-வது வயதில் கீ போர்டு வாசிக்க இளையராஜா குழுவில் சேர்ந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். 

கேரள இசையுலகில் பயணித்த தந்தை சேகரின், மரபணு, சிறுவன் ரஹ்மானுக்குள் ஊறிக் கிடந்தது.  கீ போர்டு வாசித்த விரல்களில் எதிர்காலம் குறித்த கேள்வி,  பதிலை எதிர்பார்த்து துடித்துக் கொண்டிருந்தது. அந்தத் துடிப்பும், வேகமும் சாதிக்கத் துடிக்கும் இதயமும், ரஹ்மான் என்ற கலைஞனை 1992 ஆம் ஆண்டின் அறிமுகத் திரைப்படமான ’ரோஜா’வில்தேசிய விருதைக் கொண்டு வந்து சேர்த்தது. 

அடுத்த சாதனையாக  2009 ஆம் ஆண்டு வெளியான  ’ஸ்லம் டாக் மில்லியனர்’  என்ற படத்துக்காக ஆஸ்கர் விருதும் ரஹ்மானைத் தேடி வந்தது. 

தமிழகத்தில் 25 வயதில் இசைத்துறை சாதனைக்காக முதல் படத்துக்காகத்  தேசிய விருது பெற்றவரும் ஏ.ஆர்.ரஹ்மான் தான்.  அதேபோல், 41 வயதில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை, திறமையால் தட்டிச் சென்ற தமிழரும் ஏ.ஆர். ரஹ்மான் தான். அந்த வகையில், அவரது சுயசரிதை மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்பதே உண்மை.

காலம் அருமையான தோழன், அருமையான எதிரி, அருமையான ஆசிரியன்! 
 
காலத்தை எப்படி எதிர் கொள்கிறோமோ அதற்கேற்ப அதன் பலனை வாழ்க்கையில் ருசிக்க முடியும், என்பதை ஏ.ஆர்.ரஹ்மானின் ஒவ்வொரு நகர்வும், பாடமாக உணர்த்துகிறது, அல்லது வழி நடத்த வல்லது என்றே சொல்லலாம்.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )