இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​மூடர் கூடம் நவீனின் அடுத்த பட தலைப்பை வெளியிட்டுள்ள பா.ரஞ்சித்!

July 7, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4863 Views

'மூடர் கூடம்' நவீனின் அடுத்த பட டைட்டிலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

மூடர் கூடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் நவீன். இவர் இயக்குநர் பாண்டிராஜிடம் அசோசியேட்டாக பணியாற்றியவர். கொரியன் படமொன்றை தழுவி பிளாக் காமெடி ஜார்னரில் உருவாகியிருந்த மூடர்கூடம் படத்தை 2013ல் பாண்டிராஜ் அவரது பசங்க ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டார். 

இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அப்படத்தின் வசனம் மற்றும் காமெடி மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. சென்றாயன் இப்படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.  இதன் பிறகு நீண்ட இடைவெளி விட்டிருந்த நவீன் சமுத்திரக்கனி மற்றும் சங்கவி நடிப்பில் கொளஞ்சி எனும் படத்தை தயாரித்தார். படம் முடிந்து பல நாட்களாகியும் இன்னமும் படம் வெளியாகவில்லை. 

இந்நிலையில் தற்போது இவரது அடுத்த படத்தின் தலைப்பினை பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'அலாவுதீனின் அற்புத கேமரா' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்படத்தையும் நவீன் இயக்கி நடித்துள்ளார். இதில் நவீனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாகியுள்ள இப்படத்தில் நவீன் பிக் பாக்கெட் ஆசாமியாக நடித்துள்ளார். Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )