"காலா படம் வுண்டர்பார் நிறுவனத்திற்கு லாபம் ஈட்டித் தந்த வெற்றியடைந்த படம்" - தனுஷ் | "#Kaala is a successful and profitable project for Wunderbar Films" - Dhanush | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

"காலா படம் வுண்டர்பார் நிறுவனத்திற்கு லாபம் ஈட்டித் தந்த வெற்றியடைந்த படம்" - தனுஷ்

July 7, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6208 Viewsகாலா படம் நல்ல லாபத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இந்த வாய்ப்பளித்த சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என நடிகர் தனுஷ் வுண்டர்பார் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய காலா திரைப்படம் சரியாக வசூல் செய்யவில்லை. படம் நஷ்டமடைந்து விட்டது. ரஜினியின் தூத்துக்குடி பயணமும் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் நடந்து கொண்ட விதமும் காலா படத்தின் வெளியீட்டை பாதித்துவிட்டது. இதனால் நடிகர் தனுஷ் வருத்தத்தில் இருக்கிறார் என பல வதந்திகள் பரவி வந்தன. 

தற்போது அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் தனுஷ் அவரது வுண்டர்பார் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது, காலா படம் குறித்து பலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் முரண்பாடு உள்ளது. காலா படம் வுண்டர்பார் நிறுவனத்திற்கு லாபம் ஈட்டித் தந்த வெற்றியடைந்த படம். இதற்காக சூப்பர் ஸ்டாருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )