​ஹாலிவுட்டில் இந்தியாவின் கொடியை உயர பறக்க செய்தவர் இயக்குநர் மனோஜ் நைட் சியாமளன்! | News7 Tamil Director M. Night Shyamalan - Latest News Updates

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​ஹாலிவுட்டில் இந்தியாவின் கொடியை உயர பறக்க செய்தவர் இயக்குநர் மனோஜ் நைட் சியாமளன்!

August 6, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1138 Viewsஹாலிவுட்டில் இந்தியாவின் கொடியை உயர பறக்க செய்தவர்களின் ஒருவர் மனோஜ் நைட் சியாமளன். 20 ஆண்டுகளாக வெற்றி இயக்குநராக வலம் வருபவர் பற்றிய சிறப்பு செய்தி.

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ,இர்ஃபான் கான் என்று இந்தியர்கள் தற்போது ஹாலிவுட்டில் ஜொலிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஹாலிவுட் மேப்பில் இந்தியாவின் கொடியை உயர பறக்கச்செயதவர் மனோஜ் நைட் ஷியாமளன். 

1999ம் ஆண்டு வெளியான SIXTH SENSE என்ற திரைப்படத்தின் மூலம் சர்வதேச தரத்தில் படங்களை இயக்குவதில் இந்தியர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து காட்டினார்.
இன்று CONJURING, ANNABELLE என்று பேய் படங்களுக்கு சர்வதேச அளவில் தனி மார்க்கெட் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கு பேய் படங்களை கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகித்தவர் மனோஜ் நைட் ஷியாமளன்

பேய் படம் என்றாலேயே ரத்தம் , கோரமான காட்சிகளை மட்டுமே பிரதானமாக வைத்து இயக்கி வந்தனர் ஹாலிவுட் இயக்குநர்கள். இவை ஏதுமில்லாமல்,  பேய் படத்தை விறுவிறுப்பாக எடுக்க முடியும் என ஹாலிவுட்டிற்கு எடுத்துகாட்டியவர் மனோஜ் நைட் சியாமளன். பெரும்பாலும் ஒரே குடும்பத்துக்குள் நகர்வதை போன்ற திரைக்கதையை எழுதுவதால், எளிதில் அனைவரும் கதாபாத்திரங்களை தங்களுடன் இணைத்து பார்த்து கொள்வார்கள். 


SIXTH SENSE படத்தை ஒரு கிரைம் திரில்லர் போன்று படமாக்கி ரசிகர்களை பயமுறுத்தினார். கடைசி காட்சி வரை யார் பேய் என்பதை காட்டாமல் திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றான். இதற்கு அங்கீகாரமாக, சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மனோஜ் நைட் சியாமளனை இந்தியா கொண்டாடியது. 

SIXTH SENSE  வெற்றியை தொடர்ந்து ஹாலிவுட் சினிமாவில் புதுமை புகுத்த உள்ள அடுத்து ஸ்பீல் பெர்க் என அவரை ஊடகங்கள் வர்ணித்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக UNBREAKABLE , SIGNS , THE VILLAGE என அடுத்து அடுத்து மூன்று வெற்றி படங்களை இயக்கினார்.  UNBREAKABLE படத்தின் மூலம் சூப்பர் ஹீரோ படங்களுக்கான இலக்கணத்தை மாற்றினார். SIGNS படத்தின் மூலம் வேற்று கிரகவாசிகளை சந்திக்க சூழ்நிலை ஏற்பட்டால் மனிதர்கள் உண்மையில் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்ற யதார்த்தத்தை விளக்கினார். 

இப்படி ஹாலிவுட் கண்டிராத புதுமைகளை அறிமுகப்படுத்தினார். ஹாலிவுட்டின் அடுத்த ஸீப்ல் பெர்க் என பார்க்கப்பட்ட மனோஜ் நைட் சியாமளன் தனக்கென தனி பாணி அமைத்து கொண்டு ஹாலிவுட்டிற்கு சவால் விட்டு கொண்டிருந்தார். 

ஆனால், இந்த வெற்றி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2006 தொடங்கி அடுத்த பத்தாண்டுகளில் இயக்கிய நான்கு படங்களும் படு தோல்வி.
வெற்றிகளின் போது அவரை உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடிய அதே ஊடகங்கள்  அவரை மோசமாக விமர்சித்தன. மனோஜ் நைட் சியாமளனின் கதை முடிந்தது, அவர் படமெடுக்காமல் இருந்தால் சினிமாவுக்கு நல்லது என பத்திரிகைகள் எழுதின.

2015ம் ஆண்டு வெளியான THE VISIT என்ற திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தததை  அடுத்து தான் மனோஜ் நைட் சியாமளனை திட்டுவதை நிறுத்தின ஹாலிவுட் ஊடகங்கள்.  அதனையடுத்து வெளியான  THE SPLIT திரைப்படத்தில், ஒருவருக்குள் 23 பேர் இருக்கும் SPLIT PERSONALITYஐ மையமாக வைத்து திகிலூட்டினார். இந்த படத்தின் வரவேற்பு மனோஜ் நைட் சியாமளன் என்ற இயக்குநர் இன்னும் அழியவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. 

இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியுள்ள அவர், அடுத்தாண்டு நம்மை மிரட்டுவதற்காக  GLASS என்ற திரைப்படத்துடன் தயாராகி வருகிறார்.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )