இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​அடுத்த ஷெடியூலுக்காக ஐரோப்பா செல்லும் ரஜினி படக்குழு!

September 5, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1522 Views

பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக வலம் வரவுள்ளாராம். ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சிம்ரன், த்ரிஷா,மாளவிகா மோகனன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் ஷூட்டிங் டேராடூன், டார்ஜிலிங் மற்றும் சென்னையில் நடைபெற்றது. தற்போது, இந்த படத்தின் அடுத்த கட்ட ஷெடியூலுக்காக படக்குழு ஐரோப்பா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு 40 நாட்களுக்கு ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )