​வெளியானது சாமி ஸ்கொயர் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்! | Saamy square first look motion poster released! | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​வெளியானது சாமி ஸ்கொயர் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

May 17, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4328 Views

இறுதிக்கட்ட பணிகளில் உள்ள சாமி ஸ்கொயர் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 

சாமி படத்தின் முதல் பாகத்தில் வந்த ஆறுச்சாமி கதாபாத்திரத்திலும், ஆறுச்சாமியின் மகன் கதாபாத்திரத்திலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் விக்ரம். இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். திருநெல்வேலி மற்றும் டெல்லி பகுதியில் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. 

சாமி முதல் பாகத்தில் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாசனின் மகனாக பாபி சிம்ஹா இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபு, சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரிலும் கூட திருநெல்வேலி மற்றும் டெல்லியில் கதைக்களம் அமைவது போல குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது. 

ஹரியுடன் மூன்றாவது முறையாக விக்ரம் கூட்டணி சேர்ந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. 


 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )