​வைரலாகும் ‘மிஷன் : இம்பாஸிபள் – ஃபால்அவுட்’ லேட்டஸ்ட் ட்ரைலர்! | Mission Impossible Fall out latest trailer! | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​வைரலாகும் ‘மிஷன் : இம்பாஸிபள் – ஃபால்அவுட்’ லேட்டஸ்ட் ட்ரைலர்!

May 17, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1400 Views

ஹாலிவுட்டில் ‘தி மம்மி, அமெரிக்கன் மேட்’ படங்களுக்கு பிறகு டாம் க்ரூஸ் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘மிஷன் : இம்பாஸிபள் – ஃபால்அவுட்’. இதுவரை வெளியான ‘மிஷன் : இம்பாஸிபள்’ சீரிஸில் இப்படம் 6-வது பாகமாகும். இந்தப் படத்தை இதற்கு முந்தைய பாகமான ‘மிஷன் : இம்பாஸிபள் – ரோக் நேஷன்’-ஐ இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவெரி இயக்கி வருகிறார்.

பொதுவாகவே ‘மிஷன் : இம்பாஸிபள்’ சீரிஸில் மிரட்டலான சண்டைக்காட்சிகள் இடம்பெறும். அதேபோல், இதிலும் அதிக ஆக்ஷன் சீன்ஸ் உள்ளதாம். சமீபத்தில், வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் படத்தில் வரும் ஹெலிகாப்டர் ஸ்டன்ட் காட்சியின் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, டாம் க்ரூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் புதிய டிரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற ஜூலை 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். 

 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )