இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Breaking News

Jallikattu Game

​பாகுபலி அவெஞ்சர்ஸை சந்தித்தால் எப்படி இருக்கும்!

May 17, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1812 Views

பாகுபலி வீரர்கள் அவெஞ்சர்ஸ் வீரர்களை சந்தித்தால் என்ன நிகழும் என்பதை சீன மக்கள் மீம்களாக உருவாக்கி வருகின்றனர்.

சமீபத்தில் சீனாவில் பாகுபலி 2 மற்றும் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் ஆகிய படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகின. ஒரே சமயத்தில் வெளியாகி வசூலை குவித்தது மட்டுமல்லாமல் சீன மக்களை வெகுவாக இவ்விரு படங்களும் கவர்ந்து விட்டன. இதனைத் தொடர்ந்து பாகுபலி, அவெஞ்சர்ஸை சந்தித்தால் எப்படி இருக்கும்? என்ன நிகழும்? என்கிற ரீதியில் சீன மக்கள் மீம்களை உருவாக்கத் தொடங்கினர்.

சீன மக்கள் அதிக அளவில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பேர் பயன்படுத்தக் கூடிய சமுக வலைத்தள அப்ளிகேஷனான WeChatல் மார்வெல் வீரர்களும், மகிழ்மதி வீரர்களும் சந்தித்துக் கொண்டு சேர்ந்து சண்டையிடுவது போன்ற மீம்கள் வேகமாக பரவ ஆரம்பித்தன. 

இதனை முதன்முதலாக Sutirtho Patranobis எனும் பத்திரிக்கையாளர் ஒருவர் பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் மீம்களுடன்  ட்வீட் செய்திருந்தார். அந்த மீம்களில் பிளாக் பந்தரின் வயிற்றை பாகுபலி தொட்டுப் பார்ப்பது போலவும், தேவசேனையின் கருவிழியைப் பார்த்து ஃபால்கான் ஈர்க்கப்பட்டது போலவும், பாகுபலி தலைமையில் அவெஞ்சர்ஸ் போர் புரியக் காத்திருப்பது போலவும், பாகுபலி மற்றும் அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்கள் ஒரே போஸ்டரில்  அமைந்துள்ளன.

அரியணைக்காக போரிடும் அண்ணன் தம்பி கதைதான் பாகுபலி. தேனோஸ் எனும் சூப்பர் வில்லனை எதிர்த்து இந்த கேலக்சியை காப்பாற்ற 22 மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் இணைந்து போரிடும் படம் தான்  அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார். இவ்விரு படங்களும் கோடையில் சீனாவில் வெளியாகி சீன சினிமா ரசிகர்களிடத்தில் அதிக தாக்கத்தை எழுப்பியுள்ளதன் வெளிப்பாடே இந்த மீம்கள் என்றால் அது மிகையல்ல. 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் அரவிந்த் சாமியின் பிறந்த நாள் இன்று. அவரது திரைப்பயணம்

நடிகை கஸ்தூரி அரசியல் ஆதாயங்களுக்காக திருநங்கைகளை இழிவுபடுத்தி

நடிகை த்ரிஷாவுக்கு வருமான வரித்துறை விதித்த சுமார் ஒரு

இந்தியா முழுவதும் காலா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக

‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இயக்குநர் கோகுலின்

தற்போதைய செய்திகள் Jun 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.16 /Ltr (₹ -0.08 )
  • டீசல்
    ₹ 71.54 /Ltr