முகப்பு > சினிமா

வித்யா பாலனுக்கு பதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் யூமா குரேஷி!

May 17, 2017

வித்யா பாலனுக்கு பதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் யூமா குரேஷி!


ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் படத்தில் Gangs of Wasseypur உள்ளிட்ட படங்களின் நாயகி யூமா குரேஷி நடிக்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் உருவான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை அடுத்து, “எந்திரன்-2” படத்திற்கு பிறகு, ரஜினியின் அடுத்த படத்தையும் ரஞ்சித்தே இயக்குவது என்று முடிவானது. இப்படத்தை தனுஷின் wunderbar தயாரிக்கிறது.

மும்பையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகிறது என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் மறுத்திருந்தது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வித்யாபாலனிடம் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடைசி நேரத்தில் இப்படத்தில் நடிப்பதில் இருந்து வித்யாபாலன் விலகினார். இதனை அடுத்து, ரஜினிக்கு நாயகியாக Gangs of Wasseypur, Highway உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யூமா குரேஷி ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது.

மே 28ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் யூமா குரேஷி கலந்துக் கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories : சினிமா : சினிமா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்