​சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் முதல் படத்தின் மோஷன் போஸ்டர்! | Kanaa movie's first look motion poster released! | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் முதல் படத்தின் மோஷன் போஸ்டர்!

May 15, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2456 Views


​சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தனது கடும் உழைப்பின் மூலம் குறைந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக விளங்கி வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பொன்ராம் இயக்கத்தில்  சமந்தா  உடன் இணைந்து சீமராஜா படத்தில் நடித்துள்ளார்.

அடுத்ததாக இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாரா உடன் இரண்டாவது முறையாக இணைகிறார். மேலும் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ்பிக்சன் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இவர் முதன்முறையாக தயாரிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. கனா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். 

கிரிக்கெட் வீராங்கனையாக விரும்பும் மகளின் ஆசையை நிறைவேற்ற பாடுபடும் தந்தையின் கதைதான் கனா. மரகத நாணயம் படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். 


 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )