இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Jallikattu Game

​ஜூலி நடிக்கும் 'டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்' படத்திற்கு இசையமைக்கும் பி.சுசீலா

April 14, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2437 Views

பிக்பாஸ் ஜூலி நடிக்கும் 'டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்' படத்திற்கு இசையமைப்பதன் மூலம் பாடகி சுசீலா முதன்முறையாக இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறார். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷமிட்டு பிரபலமான ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து தமிழகம் முழுக்க மிகவும் பிரபலமானார். அந்த நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காகவே தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜூலி. அப்படியே சேனல்களில் வேலை பார்த்தவாறே சினிமா வாய்ப்புகளை தேடி வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் கதையில் நடிக்க பிக்பாஸ் ஜூலிக்கு வாய்ப்பு கிடைத்தது. எஸ்.அஜய் என்பவர் இந்த படத்தினை இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே இணையதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சிறந்த பாடகியாக விளங்கி வரும் பி.சுசீலா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் எனும் தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பல்வேறு மொழிகளிலும் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் இவர். அதிக பாடல்களை பாடியவர் எனும் கின்னஸ் சாதனையையும் ஆசிய அளவிலான சாதனையையும் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி பல தேசிய விருதுகளையும் வென்றுள்ளார். 

இப்படத்திற்கு இசையமைப்பது குறித்து பி.சுசீலா கூறியதாவது, இசையமைப்பதில் எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை. படக்குழுவினர் வற்புறுத்தியதாலும் படத்தின் கதை மனதிற்கு நெருக்கமாக அமைந்தாலும் இசையமைக்க ஒப்புக் கொண்டேன் என்கிறார்.Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சிவாஜி கணேசன் எந்த வித விமர்சனத்திற்கும், அரசியலுக்கும்

அரசியல் கட்சி தொடங்குவதாக, நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து

20 வருட Forbes பத்திரிக்கை வரலாற்றில் அதிக சம்பளம் பெறும்

சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள

சீனாவின் அதிக பொருட்செலவில் உருவான திரைப்படம் என்ற பெருமையுடன்

தற்போதைய செய்திகள் Jul 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.45 /Ltr (₹ -0.14 )
  • டீசல்
    ₹ 71.92 /Ltr (₹ -0.14 )