இன்றைய வானிலை

  • 34 °C / 93 °F

Breaking News

Jallikattu Game

​இணையத்தில் வெளியாகும் மெர்க்குரி படத்தின் கதை... இக்கட்டான சூழலில் கார்த்திக் சுப்பாராஜ்!

April 14, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6533 Views

இந்தியாவில் 30 வருடங்களுக்குப் பிறகு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியாகும் சைலன்ட் திரைப்படம் மெர்க்குரி. 

இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் நடந்து வரும் தயாரிப்பாளர் சங்கம் போராட்டத்தின் காரணமாக இங்கு மட்டும் மெர்க்குரி திரைப்படம் வெளியாகவில்லை. இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், தமிழ் சினிமா ரசிகர்களுக்கான ஒரு வேண்டுகோள் கடிதத்தை நேற்று பதிந்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது, மெர்க்குரி திரைப்படம் தமிழகம் தவிர்த்து உலகம் முழுக்க 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது என் வாழ்க்கையில் மிகவும் கொண்டாட்டமாக அமைய வேண்டிய தருணம். அதே சமயம் என்னுடைய வளர்ச்சிக்கு காரணமாக அமைந்த தமிழ் ரசிகர்களுக்காக சொந்த மண்ணில் என்னுடைய படத்தை திரையிடமுடியாமல் போனது மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஆயிரக்கணக்கான தமிழ் சினிமா தொழிலாளர்கள் அனைவரும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருவதால், தமிழகத்தில் மெர்க்குரி படத்தை திரையிடாமல் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளோம். மற்ற இடங்களில் படத்தை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் படத்தினை ரிலீஸ் செய்து விட்டோம். 

மெர்க்குரி படத்தின் ஹிந்தி வெர்ஷனை கூட தமிழகத்தில் வெளியிட முடியவில்லை. விரைவில் தயாரிப்பாளர் சங்க போராட்டம் முடிந்து சுமுகமான நிலை உண்டாகும். விரைவில் படத்தை உங்களது பார்வைக்கு கொண்டுவருவோம். 

அதுவரை அன்பிற்குரிய எனது தமிழ் ரசிகர்கள் அனைவரும் தயவு செய்து காத்திருங்கள். பைரஸி இணையதளங்களில் படத்தைப் பார்க்காதீர்கள். இது எனது பணிவான வேண்டுகோள் என கூறியிருந்தார்.

இந்நிலையில் மெர்க்குரி படத்தினை வெளிமாநிலங்களில் வெளிநாடுகளில் பார்த்த பலரும் படத்தின் கதை குறித்து பல்வேறு இணைய தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சித்து வருகிறார்கள். மேலும் மெர்க்குரி திரைப்படம் 2016ல் ஹாலிவுட்டில் வெளியாகிய Don't Breathe எனும் த்ரில்லர் திரைப்படத்தின் காப்பி எனவும் கூறிவருகின்றனர். 

இதனால் மெர்க்குரி திரைப்படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாகாவிட்டால், படத்தின் வணிகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே இக்கட்டான சூழலில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சிக்கியுள்ளார். மேலும், படத்தின் கதை தெரிந்த பின்பும், பைரஸி தளங்களில் படம் வெளியாகிவிட்டாலும் படத்தின் விநியோகம் குறையும். கார்த்திக் சுப்பாராஜ் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது என்று பலரும் கூறிவருகின்றனர். 
Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

20 வருட Forbes பத்திரிக்கை வரலாற்றில் அதிக சம்பளம் பெறும்

சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள

சீனாவின் அதிக பொருட்செலவில் உருவான திரைப்படம் என்ற பெருமையுடன்

பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர்

இந்தி திரையுலகின் முதல் 5 உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக

தற்போதைய செய்திகள் Jul 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.76 /Ltr
  • டீசல்
    ₹ 72.28 /Ltr