இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​தமிழ் சினிமாவிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் விநாயகர் எவ்வாறு இடம்பெற்றார்!

September 13, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2554 Views

விநாயகர் சதிர்த்தியான இன்று தமிழ் சினிமாவிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் விநாயகர் எவ்வாறு இடம்பெற்றார் என்பது குறித்து விவரிக்கிறது இந்த சிறப்புக் காட்சித் தொகுப்பு.

இந்து சமயக் கடவுளகளின் முதன்மையான கடவுளான விநாயகர் குறித்து பல புராணக் கதைகள் உண்டு. அதே போல பல வரலாற்றுக் குறிப்புகளும் விநாயகருக்கு உண்டு. ஆனால் பொழுது போக்கு அம்சங்களில் விநாயகரின் பங்களிப்பு அசாத்தியமானது.

விநாயகரை ஒவ்வொரு தமிழ்க்குடும்பத்துக்கும் கொண்டு சேர்த்ததில் திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் பெரிய பங்கு உண்டு. 1990களுக்கு பிறகு தான் தமிழகத்தில் விநாயகர் சதூர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பாட்சா படத்திற்கு பிறகு  ரஜினி ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வாகிப்போனது விநாயகர் சதூர்த்தி. குறிப்பாக ஆட்டோ ட்ரைவர்கள் உள்ளிட்ட சமூகத்தில் அமைப்பாய் திரண்ட எளிய மனிதர்களின் கூட்டு வழிபாடாகியது விநாயகர் சதூர்த்தி. இதன்பிறகு வீரா படத்தில் தொடங்கி காலா படம்  வரை  ரஜினியின் படங்களில் விநாயகர் அவ்வப்போது தலைகாட்டி வந்தார்.

தமிழ் சினிமாவில் ரஜினி தொடங்கி வைக்கும் ஸ்டைல்களை எல்லா நடிகர்களும் பயன்படுத்துவது வழக்கம். அப்படித்தான் மற்ற நடிகர்களின் படங்களிலும் இடம்பெறத் தொடங்கினார் விநாயகர். நடிகர் அஜித்தின் அமர்க்களம் படம் தொடங்கி பல படங்களில் விநாயகர் தோன்றினார். 

மிகப்பெரிய ரசிகர் படையைக் கொண்டிருக்கும் அஜித் படங்களில் அதிகம் முக்கியத்துவம் பெரும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி முன்னிறுத்தப்பட்டது. 90களுக்கு முன்பாகவே விநாயகர் பெருமை குறித்த தனி பக்திப்படங்கள் வந்த போதும் ஜனரஞ்சக படங்களில் அவ்வப்போது விநாயகர் வருவது தமிழர்களின் ஆழ்மனத்தில் அவருக்கான இடத்தை உறுதி செய்தது.

ஆனாலும் விநாயகரை தமிழகத்திற்கு பரவலாக கொண்டு சென்றதில் திரைப்படங்களை விடவும் அதிக பங்கு சீரியல்களுக்கு உண்டு. ராமாயணம் ,  மகாபாரதம் எப்படி எழுதப்படிக்கத் தெரியாத மக்களிடம் கூட சீரியல்  வழியாக கொண்டு போய் சேர்க்கப்பட்டதோ அதே போல விநாயகரும் சீரியல் வழியாக கொண்டு போய் சேர்க்கப்பட்டார். 90 களுக்குப் பிறகு வெளிவரத் தொடங்கிய விநாயகர் சீரியல்கள் இன்று வரை வார இறுதிகளின் ப்ரைம் டைம் சீரியல்களாக இருக்கின்றன.

அதே போல் கார்டூன் கதாப்பாத்திரங்களாகவும் விநாயகர் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். குழந்தைகளுக்கான சேனல்களில் விநாயகர் குறித்து வெளிவந்த சீரியல்கள் விநாயகரை குழந்தைகளுக்கு விருப்பமான கடவுளாக மாற்றியது. 

வரலாற்று ரீதியாக விநாயகர் தமிழகத்திற்கு அப்பாற்பட்டவர் என்ற கருத்துகள் எல்லாம் வைக்கப்பட்டாலும் விநாயகர் தமிழக குடும்பங்களிலும் குழந்தைகள் மத்தியில் தவிர்க்க முடியாதவராகி விட்டார் என்பது மட்டும் நிதர்சனம்.   

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )