இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Jallikattu Game

சன்னி லியோன் கடந்து வந்த பாதை!

May 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3983 Views

சன்னி லியோன்.. பெரிதாய் அறிமுகம் தேவையில்லாதவர். இந்நாள் பாலிவுட் நடிகை.

1981ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி கனடாவில் பிறந்தார் கரெஞ்சித் கவுர் வோரா. அது தான் சன்னி லியோனின் இயற்பெயர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர் அடிப்படையில் சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர். 

பெரும்பாலான Porn நடிகைகளை போலவே, சன்னி லியோனும் நீலப்படங்களில் நடிக்கத் தொடங்கியது ஒரு விபத்தென்றே கூற வேண்டும். செவிலியராகி சேவையாற்ற விரும்பிய சன்னி லியோன், வகுப்பு தோழி ஒருவரின் மூலம் மாடலிங் துறையில் நுழைந்தார். Cheri, Mystique Magazine,  High Society, Leg World,  Lowrider போன்ற மேகஸின்களில் மாடலாக பணியாற்றி வந்தார்.

சன்னி என்ற நீலப்படத்தில் முதன் முதலாக நடித்த லியோன், பின்னர் ஒரே ஆண்டில் அமெரிக்காவின் மிகச் சிறந்த பார்ன் நடிகையாக maixim பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டார். நீலப்படங்களால் மனநிறைவு ஏற்படாத நிலையில், அத்தகைய திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு இந்தியா திரும்பினார்.  

2012ஆம் ஆண்டில் வெளியான “Jism 2” என்ற  திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்குள் கால்பதித்தார். பின்னர் Jackpot, Ragini MMS 2, Hate Story 2, Ek Paheli Leela, One Night Stand போன்ற படங்களில் நடித்தார்.
2014ஆம் ஆண்டு தமிழில் வெளியான வடகறி என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடித்தார். 

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஆண், பெண் இருபாலரிடமும் ஏற்படுத்தும் வகையில், ‘DETECT TO DEFEAT’ என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சன்னி லியோன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 

குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்ட சன்னி லியோன், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், வாடகைத்தாய் மூலம் பெற்ற இரட்டை ஆண் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். இது தனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இந்த பாசத்தாய்.

தன் கடந்தகால வாழ்க்கை குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளாத லியோன் அத்தகைய திரைப்படங்களால்தான் தற்போதை நிலையை அடைந்துள்ளதாக கூறுகிறார். சகிலா, சில்க் சுமிதா, நந்தனா சென் போன்ற நடிகைகளை போல், சன்னி லியோனையும் இந்திய ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றால் அது மிகையில்லை.

 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

பெண் ஊடகவியலாளர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்து

"நடிகையர் திலகம்" திரைப்படம், ஜெமினி கணேசனின் புகழை கெடுப்பதாக,

தமிழ் ஈழம் குறித்த படத்தை வெளியிடக் கூடாது என மர்ம நபர்கள்

ஆதார் குளறுபடிகளையே இரும்புத்திரை திரைப்படத்தில் சுட்டிக்காட்டியதாக,

"நடிகையர் திலகம்" திரைப்படம், ஜெமினி கணேசனின் புகழை கெடுப்பதாக,

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)