இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

மீண்டும் பிரமாண்ட கூட்டணியுடன் இணைந்த சூர்யா: ரசிகர்கள் மகிழ்ச்சி

March 13, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6382 Views

நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் கே.வி. ஆனந்துடன் தனது 37வது படத்துக்கு இணைவதாக வந்துள்ள அதிகார்ப்பூர்வ செய்திகள் சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.

இயக்குனர் கே.வி. ஆனந்துடன் இணைந்து ஏற்கனவே அயன், மாற்றான் என இரு பெரிய ஹிட் கொடுத்த சூர்யா, தற்போது தனது 37வது படத்தில் அவருடன் மீண்டும் இணைகிறார். தலைப்பு வெளியிடாத இந்த திரைப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் கே.வி. ஆனந்த் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ செய்தியாக்க, அதனை நடிகர் சூர்யா ரீட்வீட் செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.
 

சூர்யா நடிக்கும் இத்திரைப்படத்தை முதல் முறையாக லைகா நிறுவனம் தயாரிக்க, கே.வி. ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மேலும் பட்டுக்கோட்டை பிரபாகர் இப்படத்துக்கு வசனம் எழுதுகிறார். தற்போது தனது 36வது திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவனுடன் பணியாற்றி வரும் சூர்யா, அந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத் தலைப்பை சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியிடார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பட அறிவிப்பை சமூகவலைதளத்தில் வெளியிட்டதால், ட்விட்டரில் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் சூர்யாவில் ரசிகர்களும் இதனை பகிர்ந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகின்றனர்.

 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )