முகப்பு > சினிமா

​தாய்லாந்தில் தொடங்கிய ”கும்கி - 2” படப்பிடிப்பு!

September 12, 2017

​தாய்லாந்தில் தொடங்கிய ”கும்கி - 2” படப்பிடிப்பு!


இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது கும்கியின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ள பிரபுசாலமன் அதற்கான கதையை தயார் செய்து வருகிறார். 

மதி, ஷிவானி முதன்மை வேடம் ஏற்றிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த வாரம் முதல் தாய்லாந்தின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

யானையை மையமாக கொண்ட படம் என்பதால் முதலில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கிவிட வேண்டும் என்று தீர்மானித்து படப்பிடிப்பை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 
கும்கி படத்தின் கிளைமாக்சில் கிராபிக்ஸ் யானையை பயன்படுத்தியது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதால் இந்த முறை நிஜமான யானைகைள வைத்தே அனைத்து காட்சியையும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனால் யானை தொடர்புடைய காட்சிகள் அனைத்தையும் தாய்லாந்தில் எடுத்து முடித்துவிட படக்குழு முடிவு செய்துள்ளது.

பிரபுசாலமனின் கயல் மற்றும் தொடரி படங்கள் கலெக்‌ஷனில் சொதப்பிய நிலையில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் கும்கி-2 படத்தை பெரிய அளவில் அவர் நம்பியிருக்கிறார்.

Categories : சினிமா : சினிமா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்