முகப்பு > சினிமா

​படப்பிடிப்பிலிருந்து யாரிடமும் சொல்லாமல் சென்ற பூனம்கவுர்!

September 12, 2017

​படப்பிடிப்பிலிருந்து யாரிடமும் சொல்லாமல் சென்ற பூனம்கவுர்!


‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் மூலம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை பூனம்கவுர். அதன் பின்னர் சில படங்களில் நடித்த அவர், தற்போது ஆண்டாள் ரமேஷ் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். 

நண்டு என் நண்பன் படத்திலும், ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடித்து வரும் படத்திலும் பூனம் கவுர் நடித்து வருகிறார். ஜித்தன் ரமேஷ் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவர் பூனம்.

சென்னையில் நடைப்பெற்று வந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்துக் கொண்ட நடிகை பூனம்கவுர்,யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திடீர் என்று ஐதராபாத் சென்று விட்டார். 

அவரை அப்படக்குழு தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘தன்னால் இந்தப்படத்தில் நடிக்க முடியாது. இனி எதுவும் பேச விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து கூறிய படத்தின் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ், அவருடைய உடைகளை அவரே தேர்வு செய்வதாக கூறினார். சரி என்றோம். அவர் அதிக விலைக்கு உடைகள் வாங்க பணம் கேட்டார். இது சிறிய பட்ஜெட் படம் என்றோம். 

இதனால் பிரச்சினை செய்தார். தற்போது யாரிடமும் சொல்லாமல் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு போய்விட்டார். 

இதனால் தயாரிப்பாளருக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நடிகர் சங்கத்திலும், தாயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்ய உள்ளதாக கூறினார்.

Categories : சினிமா : சினிமா , #பூனம்கவுர்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்