முகப்பு > சினிமா

​நடிகை கடத்தல் வழக்கில் என்னை சிக்க வைக்க மஞ்சு வாரியார் சதி - நடிகர் திலீப்..!!

August 12, 2017

​நடிகை கடத்தல் வழக்கில் என்னை சிக்க வைக்க மஞ்சு வாரியார் சதி - நடிகர் திலீப்..!!


நடிகை கடத்தல் வழக்கில் தன்னை சிக்க வைக்க முன்னாள் மனைவி மஞ்சு வாரியார் சதி செய்துள்ளதாக நடிகர் திலீப் குற்றம்சாட்டி உள்ளார். 

பிரபல நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கடந்த மாதம் 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு 2-வது முறையாக மனு செய்துள்ளார். 

இந்த நிலையில் இந்த சதி குற்ற செயலில் தனது முன்னாள் மனைவி மஞ்சுவாரியார் சிக்க வைத்து இருப்பதாக திலீப் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், மஞ்சு வாரியர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் வி.ஏ. ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் தனக்கு எதிராக சதி செய்து உள்ளதாக நடிகர் திலீப் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், ADGP சந்தியா, விசாரணையின் போது மஞ்சு வாரியார் மற்றும் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் ஆகியோருக்கு இடையில் உள்ள உறவு முறை குறித்த கேள்விக்கு பதில் சொல்லும் போது கேமராக்களை அணைத்து விட்டார் என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories : சினிமா : சினிமா , #நடிகர் திலீப்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்