முகப்பு > சினிமா

நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

October 12, 2017

நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!


கட்டுமான நிறுவன உரிமையாளரை தாக்கிய வழக்கில், முன் ஜாமீன் கோரி நடிகர் சந்தானம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

சந்தானத்தின் முன் ஜாமீன் மனு, நீதிபதி ஆதிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சந்தானத்தால் தாக்கப்பட்ட பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்த் தரப்பில், தம்மையும் இந்த வழக்கில் இணைக்க வேண்டும் எனவும்,  சந்தானத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.

ஆனால், பிரேம் ஆனந்த் தரப்பை வழக்கில் இணைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும், பிரேம் ஆனந்த், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை அறிந்து தெரிவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்