இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​பிரம்மாண்டங்களின் நாயகன் ராஜமௌலி!

October 10, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
592 Views

இந்திய திரையுலகை உலகரங்கில் திரும்பிப் பார்க்க வைத்த பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலியின் பிறந்த தினம் இன்று, அவர் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

'பாகுபலி' இந்த ஒற்றை வார்த்தையை சொன்னால் அனைவருக்கும் ஞாபகம் வருவது, அதன் பிரம்மாண்டம்தான். அந்தளவிற்கு அசத்தலான திரைக்கதையாலும், காட்சியமைப்புகளோடும் 2 பாகங்கள் வெளியாகி பெரும் வெற்றிபெற்றதோடு, 2000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி, உலக அரங்கை இந்தியாவின் பக்கம் திருப்பிய சாதனைக்கு சொந்தக்காரர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியில் 1973ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி பிறந்த ராஜமெளலியின் குடும்பம், அங்கிருந்து ஆந்திர மாநிலம் கோவூர் பகுதிக்கு குடிபெயர்ந்தது. ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் திரைத்துறையில் இருந்தாலும் ராஜமெளலிக்கு சினிமா வாய்ப்பு அத்தனை எளிதாக அமையவில்லை. கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் என்பவரிடம் எடிட்டிங் உதவியாளராக பணியாற்றியதோடு, சில ஆண்டுகள் தொலைக்காட்சி தொடர்களையே ஆரம்பத்தில் இயக்கிக் கொண்டிருந்தார். அதன்பிறகு, ராகவேந்திரராவ் தயாரிப்பில், ஜூனியர் என்.டி.ஆர்-ஐ நடிக்கவைத்து ஸ்டூடண்ட் நம்பர் 1 எனும் வெற்றிப்படத்தை கொடுத்தார் ராஜமெளலி. ராஜமெளலி என்று ஒருவர் இருக்கிறார் என்பதை இந்தப்படம்தான் திரையுலகுக்கு அடையாளம் காட்டியது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய சிம்மாத்திரி, விக்ரமார்குடு, நான் ஈ, மஹதீரா என அனைத்தும் வசூல் மழை பொழிந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்கள். 

இதனிடையே, பெரிய ஹீரோக்கள் நடிப்பதாலேயே ராஜமெளலியின் படங்கள் வெற்றி பெறுவதாக பேசப்பட்டதால், நகைச்சுவை நடிகர் சுனிலை வைத்து மரியாதை ராமண்ணா என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். ஒரு கட்டத்தில் படத்துக்கு ஹீரோவே தேவையில்லை எனும் அளவுக்கு ஈ-ஐ மையமாக வைத்து அவர் இயக்கிய நான் ஈ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழியிலும் பெரும் வெற்றிபெற்றது. 

இப்படி இந்திய அளவில் முகம் தெரிந்த இயக்குநராக இருந்த ராஜமெளலியை 2015ம் ஆண்டுக்கு பிறகு உலக இயக்குநர்களின் வரிசையில் இடம்பிடிக்க வைத்தது பாகுபலி திரைப்படம். ஆம், பாகுபலி முதல் பாகம் இந்தியாவில் 700கோடிக்கும் மேல் வசூல் குவித்து பெரும் வெற்றிபெற்றதென்றால், இரண்டாம் பாகம்  2000 கோடி வசூல் ஈட்டி வரலாறு படைத்தது.

இந்திய திரைத்துறையில் எண்ணற்ற ஜாம்பவான்களை வரிசைப்படுத்தினாலும், எவருக்கும் கிடைக்காத சிம்மாசனம் ராஜமெளலிக்கு கிடைத்திருப்பது ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ராஜமெளலி, ஒரு இந்திய இயக்குநர் என நாமும் மார்தட்டிக் கொள்ளலாம்...

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )