இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​நயன்தாரா முதன்முதலாக இருவேடங்களில் நடிக்கும் ஐரா!

October 10, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
809 Views

‘இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா’ படங்களின் வெற்றிக்குப் பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கைவசம் அஜித்தின் ‘விஸ்வாசம்’, சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்’, நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ம ரெட்டி’, மகேஷ் வெட்டியாரின் ‘கோட்டயம் குர்பானா’, அறிவழகன் படம், சர்ஜுன் படம், சிவகார்த்திகேயன் படம் என படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘லக்ஷ்மி, மா’ குறும்படங்களின் மூலம் கவனம் பெற்ற சர்ஜுன்.கே.எம் இயக்கும் படம் நயன்தாராவின் கேரியரில் 63-வது படமாம். ஹாரர் ஜானரில் உருவாகும் இதனை ‘KJR ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார்.

நயன்தாரா டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இந்த படத்திற்கு ‘8 தோட்டாக்கள்’ புகழ் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘ஐரா’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )