முகப்பு > சினிமா

திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்திய ‘ஸ்பைடர்’ நடிகை!

October 08, 2017திருப்பதியில் ஜவுளிக் கடையை திறக்க வந்த பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கை காண, ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமாக விளங்கி வரும் நடிகை ரகுல் பிரீத் சிங். தமிழில் ‘தடையர தாக்க’, ‘என்னமோ ஏதோ’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான இவர், சமீபத்தில் வெளியான ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்பைடர் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் திருப்பதி வி.வி. மகால் சாலையில், புதிய ஜவுளி கடை ஒன்றின் திறப்பு விழாவுக்கு, நடிகை ரகுல்பீரித் சிங் வருகை தந்தார். அப்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். 

இதனால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், பலர் நடிகை ரகுல் பிரீத் அருகே செல்ல முயன்றனர். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்