இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

​இதுவரை Youtube-ல் எந்தவொரு இந்திய படத்தின் ட்ரெய்லரும் செய்திராத சாதனையை படைத்த #Zero!

November 7, 2018 Posted By : arun Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3449 Views

அண்மையில் வெளியிடப்பட்ட நடிகர் ஷாருக்கானின் Zero ட்ரெய்லர், இதுவரை யூடியூபில் எந்த ஒரு இந்திய படத்தின் ட்ரெய்லரும் செய்திராத சாதனையை படைத்துள்ளது. அது குறித்த தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் Zero. இதில் கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா, மாதவன், அபே தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் மற்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியான நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியது.

இந்நிலையில் ஷாருக்கானின் பிறந்த தினமான கடந்த நவம்பர் 2ஆம் தேதியன்று அவர் நடித்த Zero படத்தின் ட்ரெய்லர், மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 55 மில்லியன் (5.5 கோடி) பார்வையாளர்கள் இதனை பார்த்தனர். இதன் மூலம் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படத்தின் ட்ரெய்லர் என்ற சாதனைக்கு Zero ட்ரெய்லர் சொந்தமானது. 
இரண்டாவது நாளில் 85 மில்லியன் பார்வையாளர்கள் அதனை பார்த்திருந்தனர். 

தற்போது ட்ரெய்லர் வெளியான 96 மணி நேரங்களுக்குள் (4 நாட்கள்) அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை 100 மில்லியனாக (10 கோடி) உயர்ந்துள்ளது. இது மேலும் ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இதற்கு முன்னதாக படைக்கப்பட்ட அனைத்து சாதனைகளையும் Zero ட்ரெய்லர் தகர்த்தெறிந்து புதிய சாதனையை படைத்துள்ளது.இப்படத்தின் மற்றுமொரு சிறப்பு யாதெனில் தமிழகத்தை சேர்ந்த மறைந்த ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளிவந்த கடைசி திரைப்படமாகவும் இது அமைந்துள்ளது. அவர் மறைவிற்கு சிறிது நாட்களுக்கு முன்னர் தான் இப்படத்தில் அவர் நடித்து முடித்தார். இத்திரைப்படத்தில் ஸ்ரீதேவி கவுரவ வேடத்தில் தோன்றுகிறார்.

சல்மான் கான், கஜோல், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, ஆலியா பட், கரிஷ்மா கபூர் மற்றும் ஜூஹி சாவ்லா என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இதில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள Zero டிசம்பர் 21 அன்று வெளியாகிறது.

200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படமே நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாகவும் அமைந்துள்ளது. இதில் ஷாருக்கான் உயரம் குறைந்தவராக நடித்துள்ளார். 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )