இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Breaking News

Jallikattu Game

​இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை சன்னி லியோனி..!

March 5, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5183 Views

நடிகை சன்னி லியோனி இரண்டாவது முறையாக தாயான சம்பவம் அவரது ரசிகர்களை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகை சன்னி லியோனி மற்றும் அவரது கணவர் டேனியல் வெப்பர் ஆகிய இருவரும் இணைந்து கடந்த ஆண்டு ஒரு குழந்தையை சட்டப்பூர்வமாக தத்தெடுத்தெனர். இவர்களுடைய இந்த செயலுக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆச்சரியப்படும் செய்தி என்னவென்றால் சன்னி லியோனி கற்பம் அடையாமலும், குழந்தையை தத்தெடுக்காமலும் தாயாகியுள்ளார் என்பது தான். சன்னி லியோனி-டேனியல் வெப்பர் ஜோடி வாடகை தாய் திட்டத்தின் மூலம் தங்களுடைய சொந்த குழந்தைக்கு பெற்றோராகியுள்ளனர். 

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை சன்னி லியோனி, தங்கள் குடும்பத்தை ஒரு பெரிய குடும்பமாக மாற்றுவது குறித்து பல ஆண்டுகள் சிந்தித்துவந்ததாகவும் அது தற்போது நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்களுடைய குழந்தைகளான அஷர் சிங் வெப்பர், நோவா ஷிங் வெப்பர் மற்றும் நிஷா கவுர் வெப்பர் ஆகியோரின் மூலம் தங்கள் குடும்பம் முழுமையடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். நடிகை சன்னிலியோனிக்கும் அவரது கணவருக்கும் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் அரவிந்த் சாமியின் பிறந்த நாள் இன்று. அவரது திரைப்பயணம்

நடிகை கஸ்தூரி அரசியல் ஆதாயங்களுக்காக திருநங்கைகளை இழிவுபடுத்தி

நடிகை த்ரிஷாவுக்கு வருமான வரித்துறை விதித்த சுமார் ஒரு

இந்தியா முழுவதும் காலா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக

‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இயக்குநர் கோகுலின்

தற்போதைய செய்திகள் Jun 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.16 /Ltr (₹ -0.08 )
  • டீசல்
    ₹ 71.54 /Ltr