இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

தனுஷ் - வெற்றிமாறனின் ‘வடசென்னை’ முன்னோட்டம் வெளியானது

July 28, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3048 Views

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம், இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கி வரும் இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகின்றனர். நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் உள்ள இத்திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுத்துள்ளது. 

வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றிய கதை எனவும், இதில் தனுஷ் கேரம் வீரராக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது படத்தின் எதிர்பார்ப்புக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

பொல்லாதவன், ஆடுகளம் போன்ற ஹிட் படங்களை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டனியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டத்தை தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். 

‘வடசென்னை’ படத்தின் முன்னோட்டம்

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )