இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

ஏ.ஆர்.ரகுமான் மியூசிக்கா இது? குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்

September 25, 2018 Posted By : manoj Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
9569 Views

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் ‘சிம்டாங்காரன்’ நேற்று வெளியாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வலைதளத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயகத்தில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தீபாவளி விருந்தாக திரைக்கு வரயிருக்கும் இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் நேற்று வெளியானது. மெர்சல் திரைப்படத்தில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் மூலம், ரசிகர்களின் உணர்ச்சியை கிளப்பிய இசை புயலிடம் இருந்து மீண்டும் அது போல ஹிட் ரகத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ‘சிம்டாங்காரன்’ எந்த மாதிரியான பாடல் என சமூகவலைதளத்தை எட்டிப்பார்த்தால் ஒரே ரணகளமாக காட்சியளிக்கிறது.

பாடலசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடல் தொடக்கத்தில், புதிய கீதை படத்தில் வரும் “பாலு குலேதே பாலு குலேதே பாலு குலேதே மஜீ ஹெலா கொரிஷ்ணா” போல “பல்டி பக்குற டர்ல விடனும் பல்தே” என வருகிறது. சரி பாடல் வரிகள்தான் புரியவில்லை என்றால் ஏ.ஆர்.ரகுமானின் ட்யூனும் சுமாராக இருப்பதாக பாடல் கேட்ட அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாடலாசிரியர் ‘சிம்டாங்காரன்’ என்றால் கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெகு நாட்களாக சர்கார் படத்தை பற்றிய அப்டேட்களுக்காக காத்திருந்த விஜய் மற்றும் ரகுமானின் ரசிகர்கள் தற்போது ‘சிம்டாங்காரன்’ சொல்லை வைத்து கெத்துகாட்டி வருகின்றனர். மேலும் படத்தின் சிறப்பான பாடலையே முதல் சிங்கிள் ட்ராகாக வெளியிடுவது வழக்கம் என்பதால், இதனை வைத்து படத்தின் மற்ற பாடல்கள் எப்படி இருக்கும் என விஜய் ரசிகர்கள் சற்று பயத்தில் உள்ளது போல் இருக்கிறது அவர்களது பதிவுகள். பொதுவாக ரகுமானின் மெட்டுக்கள் மெல்ல மெல்ல மனத்தில் இடம்பிடிக்கும் என்பதால் மாணவர்கள் அஸைன்மண்ட் எழுதுவது போல ‘சிம்டாங்காரன்’ கேட்டு வருவதாக மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். 

ரகுமானின் இசையை விமர்சிக்க முடியாமலும், விஜயை விட்டுகுடுக்க முடியாமலும் அவரது ரசிகர்கள் ஏ.ஆர்.ரகுமான் மியூசிக்கா இது? என்ற குழப்பத்தில் உள்ளனர். இதனிடையே சர்கார் படத்தில் அடுத்த சிங்கிள் வரும் ஞாயிற்றுகிழமை வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

‘சிம்டாங்காரன்’ பாடல்

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )