முகப்பு > சினிமா

வெளியானது ரஜினியின் காலா திரைப்படத்தின் FirstLook!

May 25, 2017கபாலி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த காலா திரைப்படத்தின் Firstlook இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கபாலி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனது 2.ஒ திரைப்படத்தில் நடித்து வந்தார் நடிகர் ரஜினிகாந்த், இந்நிலையில் ரஜினியின் அடுத்த திரைப்படத்தையும் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்க உள்ளதாக டிவிட்டரில் நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்தார். 
 
நடிகர் ரஜினிகாந்தின் 161வது படமான அதற்கு பெயர் வைக்கப்படாமல் இருந்த நிலையில் நேற்று அப்படத்திற்கு காலா என பெயர் தலைப்பு வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. 

மேலும் இன்று அப்படத்தின் ஃப்ஸ்ட்லுக் (Firstlook) வெளியாக இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தின் Firstlookயை காண ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் சரியாக 6 மணிக்கு ‘காலா’ திரைப்படத்தின் Firstlook வெளியானது. 
 

Categories : சினிமா : சினிமா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்