இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Jallikattu Game

நயன்தாரா நடிப்பில் உருவான ‘இமைக்கா நொடிகள்’ டிரெய்லர் வெளியீடு!

May 18, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2732 Views

நடிகை நயந்தாராவின் அசத்தல் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமக இன்று வெளியானது. 

இமைக்கா நொடிகள் திரைப்படத்தை டிமாண்டி காலனி திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில், அதர்வா, நயந்தாரா, ராஷி கானா, அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படத்தின் டிரெய்லரை இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவருடைய டிவிட்டர் சமூக வலைபக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர். முருகதாஸ, இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார், மேலும் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

டிமாண்டி காலனி திரைப்படத்தைப்போலவே இந்த திரைப்படமும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது, அறம், டோரா படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நயந்தாரா, இந்த படத்திலும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

வங்கதேசத்தில் ரோஹிங்கிய அகதிகள் தங்கியுள்ள முகாமில் உள்ள

பெண் ஊடகவியலாளர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்து

"நடிகையர் திலகம்" திரைப்படம், ஜெமினி கணேசனின் புகழை கெடுப்பதாக,

தமிழ் ஈழம் குறித்த படத்தை வெளியிடக் கூடாது என மர்ம நபர்கள்

ஆதார் குளறுபடிகளையே இரும்புத்திரை திரைப்படத்தில் சுட்டிக்காட்டியதாக,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 81.11 /Ltr (₹ 0.16 )
  • டீசல்
    ₹ 72.91 /Ltr (₹ 0.17 )