முகப்பு > சினிமா

டிக்டிக்டிக் படத்தின் முதல் போஸ்ட்டர் வெளியானது!

July 17, 2017

டிக்டிக்டிக் படத்தின் முதல் போஸ்ட்டர் வெளியானது!


ஜெயம்ரவி நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி வரும் டிக்டிக்டிக் படத்தின் முதல் போஸ்டர் வெளியானது.நேமிசந்த் ஜபக் பெயரில் ஹிதேஷ் ஜபக்-ன் பிரம்மாண்ட தயாரிப்பில், சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், ஆரோன் ஆஷிஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துவரும் டிக்டிக்டிக் திரைப்படத்தின் பெரும்பாலான பணிகள் நிறவடைந்து விட்டன. இந்நிலையில், படத்தின் முதல் போஸ்ட்டர் இன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் தகவல்கள் வெளியானது. அதன்படி இன்று டிக்டிக்டிக்  படத்தின்  விண்வெளிவீரரின் உடையை ஜெயம் ரவி அணிந்திருப்பது போன்ற போஸ்ட்டர் வெளியிடப்பட்டது. இது விண்வெளியை மையமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளதால் இது தமிழ் திரைப்படங்களில் முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் டிக்டிக்டிக் படத்தின் டீசரை பார்த்ததாகவும், அது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்டமாக இருப்பதாகவும் ட்வீட் செய்திருந்தார்.

இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories : சினிமா : சினிமா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்