முகப்பு > சினிமா

தியேட்டர்களில் திரைப்பட கட்டணங்கள் தொடர்பாக விஷால் வேண்டுகோள்!

October 13, 2017

தியேட்டர்களில் திரைப்பட கட்டணங்கள் தொடர்பாக விஷால் வேண்டுகோள்!


திரையரங்குகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என நடிகர் விஷால் அறிவுறுத்தியுள்ளார்.

கேண்டீன்களீல் விற்கப்படும் பொருட்களில் அச்சிடப்பட்ட விலையை மட்டுமே வாங்கவேண்டும் என்றும், திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், அனைத்து திரையரங்குகளிலும் தனியார் நிறுவனங்களின் குடிநீரை விற்காமல் அம்மா குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், புதிய விதிகளை பின்பற்றாத தியேட்டர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ரசிகர்களின் சிரமம் கருதி விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும் என விஷால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்