இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தின் பின்னணியில் திரைத்துறையின் முக்கியப் புள்ளி?

February 12, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3800 Views

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், சினிமா பிரமுகர் ஒருவர் பின்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை தியாகராய நகரில் உள்ள நடனப்பள்ளி ஒன்றில் கடந்த 31ம்தேதி மலேசிய கலை நிகழ்ச்சிக்காக நடன ஒத்திகையில் ஈடுபட்டிருந்த நடிகை அமலாபாலுக்கு தொழிலதிபர் அழகேசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக, மாம்பலம் காவல் நிலையத்தில் அமலாபால் புகார் கொடுத்ததையடுத்து, அழகேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேகம் எழுந்ததால், மலேசிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவன சென்னை மேலாளர் ரசாக் என்பவரையும், பல்லாவரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரையும் தேடி வந்தனர். 

பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன் ஜாமீன் கோரி சென்னை மேலாளர் ரசாக் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீது இன்று மாலை விசாரணை நடைபெறுகிறது. 

இந்த வழக்கில் திரைத்துறையின் முக்கியப்புள்ளி ஒருவர் பின்னணியில் இருப்பதாக கூறப்படுவதால், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )